திருவையாறிலிருந்து 16 கி. மீ. தொலைவிலும், அரியலூர் இரயில் நிலையத்திலிருந்து 11 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமானை வேண்டி அம்பிகை தவம் செய்த தலம். தனது தாயைக் கொன்ற பழிதீர பரசுராமர் வந்து வழிபட்ட தலம். கஜமுகாசுரனை அழித்துவிட்டு விநாயகர் ஆனந்த நடனம் ஆடிய தலம். |